Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் ரூ.1120 உயர்வு.. புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!

Siva
வெள்ளி, 29 மார்ச் 2024 (10:50 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென ஒரு சவரன் ஐம்பதாயிரம் என்ற இலக்கை தொட்டதாக வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது இன்று ஒரே ஒரு சவரனுக்கு 1120 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்


தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 140 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1120 ரூபாயும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,390 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்  ரூபாய் 51,120 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6860  எனவும் ஒரு சவரன் ரூபாய் 54,880 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 80.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80,800 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments