Publish Date: Tue, 26 Mar 2024 (11:55 IST)
Updated Date: Tue, 26 Mar 2024 (11:58 IST)
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்தாலும் ஒரு சவரன் 50 ஆயிரத்துக்கு நெருங்கி இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 5 ரூபாயும் ஒரு சவரனுக்கு 40 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,200 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் ரூபாய் 49,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6670 எனவும் ஒரு சவரன் ரூபாய் 53,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 80.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது