பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

Siva
வெள்ளி, 5 டிசம்பர் 2025 (10:55 IST)
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று பங்குச்சந்தை நேற்று போலவே உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 
 
இந்த வகையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து, 85,5759 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி 96புள்ளிகள் உயர்ந்து, 26,128  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் விலை உயர்ந்த முக்கியப் பங்குகளாக பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர். ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, டைட்டன் ஆகியவை உள்ளன.  
 
அதே சமயம், இன்றைய வர்த்தகத்தில் சில முக்கியப்பங்குகளின் விலைகள் குறைந்துள்ளன. அவற்றில் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், சிப்லா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டிகோ, டியோ ஃபைனான்ஸ், சன் ஃபார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

காங்கிரஸ் கேட்ட 70 சீட்!.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த மு.க.ஸ்டாலின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments