பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

Siva
திங்கள், 2 ஜூன் 2025 (10:30 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளே திடீரென சென்செக்ஸ் கிட்டத்தட்ட 600 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குச்சந்தை சரிவில் தான் வர்த்தகமாகி வருகிறது என்பதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 590 புள்ளிகள் சரிந்து 80,869 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி   வருகிறது. அதேபோல், தேசிய பங்கு சந்தை நிஃப்டி 165 புள்ளிகள் சரிந்து 24,586 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் அப்பல்லோ, ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ் வங்கி, ஜியோ, பைனான்ஸ், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதே நேரத்தில், டிசிஎஸ், டாட்டா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!.. ஈரான் போர் எதிரொலி!.. இந்தியாவில் மதுபான விலை உயர்வு!...

எங்கே என் பங்குன்னு கேட்க மாட்டேன்!.. தேர்தலில் போட்டியில்லை!.. கமல் அறிவிப்பு!...

நாங்க மட்டும் தக்காளி தொக்கா?!.. தேமுதிகவுக்கு 10 சீட்!. கோபத்தில் கூட்டணி கட்சிகள்!..

குடும்ப தலைவிக்கு ஒரு ஃபிரிட்ஜ்!.. அதிமுக தேர்தல் அறிக்கை!..

திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்!.. கரன்ட் அப்டேட்!....

அடுத்த கட்டுரையில்
Show comments