இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? குழப்பத்தில் தொடங்கிய வர்த்தகம்..!

Siva
திங்கள், 15 செப்டம்பர் 2025 (09:59 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் முதல் நாளில் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 10 புள்ளிகள் உயர்ந்து, 81,924 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. ஆனால், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து, 25,100 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதே நேரத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயின்ட்ஸ், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், ஐடிசி, சன் பார்மா, டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments