இந்தியா பங்குச் சந்தையை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் திடீரென உயர்ந்த பங்குச்சந்தை நேற்று திடீரென சரிந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 500 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் குழப்பமடைந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வர்த்தகம் தொடங்கிய நிலையில் 500 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 412 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தக ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை 153 புள்ளிகள் உயர்ந்து 17474 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஒரு நாள் ஏற்றம் ஒரு நாள் இறக்கம் என்ன மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.