Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை நிலவரம் என்ன? இன்றைய நிஃப்டி, சென்செக்ஸ் தகவல்கள்..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (10:55 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த வாரம் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை சற்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 910 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது

அதேபோல் தேசிய பங்குச் சந்தை அனுப்பி 35 புள்ளிகள் உயர்ந்து 19,084 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்கு சந்தை கடந்த வாரம் மிக மோசமாக சரிந்ததால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்த நிலையில் இந்த வாரம் முதல் நாள் பங்குச்சந்தை ஏற்றம் கண்டு இருப்பது ஆறுதலை அளித்துள்ளது

இனிவரும் காலங்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும்  அதனால் புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்ற முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments