Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva
திங்கள், 6 ஜனவரி 2025 (18:26 IST)
மும்பை பங்குச் சந்தை இன்று ஒரே நாளில் 1258 பள்ளிகள் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

 இன்று காலை 58 புள்ளிகள் உயர்ந்து 79,281.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் பின்னர் படிப்படியாக குறைந்தது.  குறைந்த பட்சமாக 77,781.62 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 79,532.67 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

அதேபோல் நிஃப்டியும் இன்று 388.70 புள்ளிகள் குறைந்து 23616.05 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்று  ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், டைட்டன் ஆகிய இரண்டு நிறுவன பங்குகள் மட்டுமே சற்று உயர்ந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க்  டெக் மஹிந்திரா, ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க், டி.சி.எஸ். ஆகிய 28 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

மேலும் இந்திய ரூபாய் மதிப்பு   3 பைசா வீழ்ச்சி கண்டு இதுவரை இல்லாத அளவிற்கு 85.82 ரூபாயாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments