இந்திய ரூபாய் மதிப்பு திடீர் உயர்வு.. உள்ளூர் முதலீடுகள் அதிகரித்ததா?

Siva
புதன், 5 மார்ச் 2025 (18:41 IST)
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவு இன்று ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும், இன்றைய வர்த்தக முடிவின்போது அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87 ஆக நிறைவு பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்றைய வணிக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ.87.19 ஆக இருந்த நிலையில், இன்று அது 19 காசுகள் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நிதி படிப்படியாக வெளியேறிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டதால் பங்குச்சந்தை மிக மோசமாகச் செயல்பட்டது. ஆனால், அதே நேரத்தில் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறினாலும், உள்ளூர் முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
நேற்றைய நிலவரப்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.3405 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ.4,851 கோடி முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்ந்துள்ளதும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அக்டோபரில் வெளியாக இருக்கும் OnePlus 16 ஸ்மார்ட்போன்.. 240Hz ஸ்க்ரீன்.. 2K ரெசொலூஷன்.. LIPO பேக்கேஜிங்..!

Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போன்: டைட்டானியம் Frame.. 200MP கேமரா.. Snapdragon 8 Gen 4 சிப்செட்..!

10 வருசம் பக்கா பிளான்!.. வட கொரியாவிலிருந்து தப்பித்த குடும்பம்!.. தென் கொரியாவில் தஞ்சம்..

டெல்லியில் விமானம் ரன்வேயில் கிளம்பியபோது திடீரென ஏற்பட்ட தீ விபத்து.. 232 பயணிகள் நிலை என்ன?

புதிய iQOO ஸ்மார்ட்போன்: 8,000mAh பேட்டரி, 200MP கேமரா.. MediaTek Dimensity 9500 பிராசஸர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments