Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி முதல் மீண்டும் விற்பனை… ஹார்லி டேவிட்ஸன் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (11:18 IST)
இந்தியாவில் மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனையை ஆரம்பிக்க உள்ளதாக ஹார்லி டேவிட்சன் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் கடந்த 111 ஆண்டுகளாக தனது பைக்குகளை விற்று வருகிறது. இந்த நிறுவனத்திற்காக ஹரியானாவில் ஒரு தொழிற்சாலை மட்டுமே இந்தியாவில் இயங்கி வருகிறது. ஹார்லி டேவிட்சனின் மாடல் பைக்குகள் இன்றும் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படும் பைக்காக இருந்து வருகிறது. ஆனால் திடீரென இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. எதிர்பார்த்த அளவு இந்தியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனை இல்லாததால், இந்த முடிவை எடுத்ததாக ஹார்லி டேவிட்சன் அறிவித்தது. 

இந்நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனையை மீண்டும் துவங்குவதற்கு ஹார்லி டேவிட்சன் இப்போது அறிவித்துள்ளது. இதையடுத்து விற்பனை ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் வர்த்தக செயல்பாடுகள் முழு வீச்சில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹார்லி டேவிட்சன் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான்! - அஜர்பைஜான் அதிபர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments