Publish Date: Tue, 15 Jun 2021 (10:29 IST)
Updated Date: Tue, 15 Jun 2021 (10:30 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து சவரன் ரூ.36,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து சவரன் ரூ.36,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11 உயர்ந்து ரூ.4,576-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளியின் விலை ரூ.75.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.