தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி.. தங்கம் விலை இன்று சற்று சரிவு..!

Mahendran
சனி, 13 செப்டம்பர் 2025 (09:46 IST)
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்தும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இருப்பினும், இந்த விலை குறைப்பு மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவில் உற்சாகம் இல்லை.
 
சென்னையில், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10,220 என்றும், ஒரு சவரனுக்கு (8 கிராம்) ரூ.81,760 என்றும் விற்பனையாகி வருகிறது.
 
அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.11,149 என்றும், ஒரு சவரனுக்கு (8 கிராம்) ரூ.89,192 என்றும் விற்பனையாகிறது.
 
தங்கத்தின் விலை குறைந்தாலும், வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.1,000 அதிகரித்து, தற்போது சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,43,000 என விற்பனையாகி வருகிறது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறிய மனைவி.. பரிதாபமாக பலியான உயிர்..!

இந்தியர்கள் மனைவி, மகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது ஏன்? இவ்வளவு லாபமா?

தெரியாம குண்டு போட்டுட்டோம்.. மன்னிச்சுக்கோங்க.. அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்..!

நீங்கள் சுயத்தை இழந்து, கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள்.. கிருத்திகா உதயநிதி சொல்வது யாரை?

விஜய்யுடன் நான் ஒரே வீட்டில் தங்க வேண்டும்.. நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த சங்கீதா..!

அடுத்த கட்டுரையில்