தங்கம் விலை இன்றும் உயர்வு.. ரூ.90,000ஐ நெருங்கிவிட்டது இம்மாதத்திற்குள் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடுமா?

Siva
செவ்வாய், 7 அக்டோபர் 2025 (09:40 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்று ஒரு கிராம் ரூ.11,000-ஐத் தாண்டிய என்பதை பார்த்தோம். இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,000-ஐ நெருங்கி உள்ளது. இது நகை பிரியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று ஒரே நாளில், ஒரு கிராம் தங்கம் ரூ.75-ம், ஒரு சவரன் தங்கம் ரூ.600-ம் உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,125
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 11,200
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 89,000
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 89,600
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,136
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,218
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 97,088
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  97,744
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 167.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 167,000.00
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா சி.வி. சண்முகம்? என்ன காரணம்?

அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments