Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதான முறையில் சுவையான மெதுவடை செய்ய !!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (17:20 IST)
தேவையான பொருட்கள்:

உளுந்து - 1கப்
பச்சை மிளகாய் -2
அரிசி - 1/2 ஸ்பூன்
பொட்டுக் கடலை வறுத்தது - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - வறுக்க



செய்முறை:

உளுந்து மற்றும் அதோடு அரிசி, வறுத்த பொட்டுக் கடலை ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள். 1 மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து அதோடு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைக்க வேண்டும்.

பின்னர் அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொள்ளுங்கள். தயிரும் ரவையும் இருந்தால் போதும். காலை உணவு நொடியில் தயார்.

கடாய் வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிறு துளி மாவை போட்டுப் பாருங்கள். உப்பி பொறிந்து வந்தால் எண்ணெய் ரெடி. அடுத்து உள்ளங்கையில் தண்ணீரில் நனைத்து எலுமிச்சை அளவு மாவு எடுத்து தட்டுங்கள். வடை போல் வட்டமாக தட்டியதும் நடுவே ஒரு ஓட்டை போட்டுக்கொள்ளுங்கள்.

கையில் வரவில்லை எனில் பால் கவர் அல்லது வெற்றிலை, வாழை இலை பயன்படுத்தி தண்ணீர் தொட்டு வடை தட்டி கடாயில் போட்டால் நழுவிக்கொண்டு விழும். பின் அதை பொன்னிறமாக வறுத்து எடுங்கள். அவ்வளவுதான் சுவையான மெதுவடை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments