Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பரான சுவையில் ரசமலாய் செய்ய !!

Advertiesment
ரசமலாய்
தேவையான பொருட்கள்:
 
பால் - 3 லிட்டர்
சர்க்கரை - 3 கப்
தண்ணீர் - 4 கப்
குங்குமப் பூ - சிறிது
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா - 3 டேபிஸ் ஸ்பூன்

செய்முறை:
 
பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவற்றை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். 1 லிட்டர் பாலைக் கொதிக்க வைத்து அரை லிட்டர் அளவுக்கு சுண்ட வைக்கவும்.
 
அந்த பாலில் 1 கப் சர்க்கரை, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
 
மீதியுள்ள 2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து கொதிக்கும் போது எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு கலந்தவுடன் பால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு காட்டன் துணியில் மூட்டை கட்டி தண்ணீர் வடியும் படி வைக்கவும்.
 
தண்ணீர் எல்லாம் நன்றாக வடிந்த பின் அந்த மூட்டையில் உள்ள கலவையை ஒரு தட்டில் கொட்டி உள்ளங்கையால் மென்மையாக அழுத்தி பிசையவும்.  பின்னர் அந்த மாவை சிறு சிறு வடை போல தட்டிக் கொள்ளவும்.
 
அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீதியுள்ள 2 கப் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவேண்டும். கொதிக்கும் போது வடை போல் தட்டி வைத்திருக்கும் பன்னீரை சர்க்கரைப் பாகில் போடவேண்டும். அடுப்பை மிதமான தீயில்வைக்க வேண்டும். அரை மணி நேரத்தில் போட்ட வடைகள் உப்பி, பெரிதாகி விடும். இப்போது இந்த வடைகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாலில் போட வேண்டும்.
 
ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும். தித்திப்பான ரசமலாய் தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்ட வெள்ளரிக்காய் !!