Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உன்னோடு வாழாத வாழ்வென்ன

அமர்க்களம்

Advertiesment
அமர்க்களம்

Webdunia

படம் : அமர்க்களம் குரல் : சித்ரா
பாடல் : உன்னோடு வாழாத வாழ்வென்ன இயற்றியவர் : வைரமுத்து

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றத
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றத
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவ
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தான

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றத

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தைய
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தைய
உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லைய
நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்ல

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றத
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றத

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிர
நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிர
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுத
நீ ஈரமான பாறை உள் உள்ளம் சொல்லுத
உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்ல

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றத
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றத
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவ
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

Share this Story:

Follow Webdunia tamil