Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நதிகளை இணைத்தால் நாட்டில் வறுமை இருக்காது : சூப்பர் ஸ்டார்

நதிகளை இணைத்தால் நாட்டில் வறுமை இருக்காது : சூப்பர் ஸ்டார்
, செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (14:13 IST)
இன்று ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும்  தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு ரஜினி பேட்டி கொடுத்தார்.
அப்போதுஅவர் கூறியதாவது :
 
தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
நதிகள் இணைப்புக்கு தனி அமைச்சகம் என்ப அமையும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
 
பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால் நதிகளை இணைக்க வேண்டும்.
 
நதிகள் இணைப்பிற்கு ரஜினி ஆதரவு  தெரிவித்துள்ளார். மேலும் தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் நதிகள் இணைக்குமாறு கூறினேன் அதற்கு  பகீரத் யோஜனா என்று பெயர் வைக்குமாறு சொன்னேன்.அதைச் சிரித்துக் கொண்டே கேட்டார்.
 
நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது அதில் நதிகளை இணைப்போம் என்று தெரிவித்தனர். அப்படி நதிகளை இணைத்தால் நாட்டில் உள்ள வறுமை ஒழியும்.: விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும்.
 
பாஜக அடுத்து ஆட்சிக்கு வருமானால் நிச்சயமாக நதிகள் இணைப்பை முதலில் நிறைவேற்றும் என்று தெரிவித்தார்.
 
மேலும் கமலுக்கு உங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேட்டதற்கு,என்னுடைய ஆதரவை தெரிவித்துவிட்டேன் மீண்டும் கேட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பைக் கெடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
 
மேலும் நிருபர்கள் தேர்தல் குறித்து கேட்டதற்கு, இது தேர்தல் சமயம் அதனால், சென்ஸ்டிவான விசயங்களை கேட்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலுக்கும் எனக்கும் இடையேயான நட்பை கெடுத்து விடாதீர்கள் -ரஜினி ’ஓபன் டாக்’