Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக - அதிமுகவுக்கு எதிரான பிரசாரத்திற்கு மறுப்பு - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (15:57 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆவார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சில காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சந்தித்தார். 
 
அப்போது அவர் கூறியதாவது :
 
நாட்டில் உள்ள நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். பாஜக அதிமுக கூட்டணி கட்சிக்கு எதிராக 30 இடங்களில் பிரசார செய்ய அனிமதி கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
மேலும், நேற்று வெளியான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இந்தியா முழுவதும் சமஸ்கிருதத்தை கற்பிப்போம் என்று இருந்ததைக் கூறிக் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments