Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது கருத்துக்கணிப்பு..! 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்.! அதிமுக, பாஜகவுக்கு ஷாக்..!

Senthil Velan
வியாழன், 8 பிப்ரவரி 2024 (18:32 IST)
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
 
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்தியா டுடே தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
 
அதில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 38 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
உத்திர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில், 70 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி பத்து இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில், 24 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
 
கேரளாவில் 20 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸும், 19 தொகுதிகளில் பாஜகவும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
 
பீகாரில் 32 தொகுதிகளை பாஜகவும், 8 தொகுதிகளை இந்தியா கூட்டணியும் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மகாராஷ்டிராவில் 26 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 22 தொகுதிகளில் பாஜகவும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
 
ஆந்திராவில் தெலுங்கு தேசம் 17 தொகுதிகளையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 8 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று  இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments