Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேனியில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் மாதம் 2 நாள் தேனியில் உங்களோடு தங்குகிறேன் - சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின்!

Advertiesment
Minister Udhayanidhi Stalin

J.Durai

மதுரை , திங்கள், 25 மார்ச் 2024 (15:04 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.,
 
உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பொதுமக்கள் கூடி நின்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
கூட்டத்தில் ஆம்புலென்ஸ் வாகனம் கூட்டத்தை கடக்க முடியாத நிலைய பார்த்த உதயநிதி ஸ்டாலின் ஆம்புலென்ஸ்க்கு வழிவிட சொல்லி ஆம்புலென்ஸ் வாகனம் கடந்து சென்ற பின் பேச ஆரம்பித்தார்.
 
அப்போது அவர் பேசியது:
 
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் உசிலம்பட்டி மக்கள் திமுகவை ஏமாற்றி விட்டீர்கள், மறுபடியும் ஏமாற்றுவீர்களா, மறுபடியும் ஏமாற்றினால் நீங்கள் தான் ஏமார்ந்து போவீர்கள்.
 
மதுரையிலிருந்து கிளம்பி இராமநாதபுரம், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பேசிவிட்டு வர லேட் ஆகிவிட்டது.
 
நான் பார்த்த நாடாளுமன்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் தான் மிக பெரிய எழுச்சி.
 
கடந்த 2019 இல் 39 தொகுதிக்கு 38 தொகுதி வெற்றி பெற்றோம் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம்.
 
ஆனால் இந்த தொகுதியை நான் நம்ப மாட்டேன், இந்த முறை அதை சரி செய்வீர்களா? உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தங்கதமிழ்ச் செல்வனை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
 
இப்போது ஐபிஎல் போட்டி நடைபெறுகிறதா அதில் பல அணிகள் உள்ளது, ஐபிஎல் போட்டியும் அதிமுகவும் ஒன்று தான்.
 
அதிமுகவில் டிடிவி அணி, ஒபிஎஸ் அணி, சசிக்கலா அணி, இபிஎஸ் அணி, மோடி அணி, ஜே.தீபா அணி, ஜே.தீபாவின் டிரைவர் அணி என பல அணிகள் உள்ளது இவங்க எல்லோரும் ஒரு டீம் ல தான் விளையாடுவாங்க, ஐபிஎல்-க்கு மட்டும் காசு வாங்கிட்டு விளையாடுவாங்க அதை போல தான் தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
அடுத்த 24 நாள் ஒவ்வொரு வீடாக சென்று கண்டிப்பாக திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் உறுதி ஏற்க வேண்டும் செய்வீர்களா...
 
எத்தனை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் மக்கள் 5 லட்சம் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் தேனியில் மாதம் 2 நாள் உங்களோடு தங்குகிறேன்.
 
பெட் வச்சுக்கலாமா, சவாலா.
 
40 க்கு 40 வெற்றி பெற போவது உறுதி ஆனால் அத்துனை தொகுதிகளை விட எனக்கும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த தேனி தொகுதி மிக மிக முக்கியம்.
 
வரும் ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் 100வது பிறந்த நாள் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நீங்கள் உறுதி ஏற்க வேண்டும் கலைஞருக்கு உண்மையான தொண்டனாக செய்ய போவது தேனி தொகுதி உள்பட 40 தொகுதியையும் வெற்றி பெற வைத்து காட்ட வேண்டும் சவாலை நீங்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் என பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இ.பி.எஸ் யாரிடமாவது காசு வாங்கித்தான் டீ குடிப்பார்... நாங்கள் சொந்தக் காசில் டீ குடிப்போம் - அண்ணாமலை கடும் தாக்கு