Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த -சுயேட்சை வேட்பாளர்!.

நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த -சுயேட்சை வேட்பாளர்!.

J.Durai

மதுரை , வியாழன், 21 மார்ச் 2024 (08:13 IST)
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது
 
இதில் தொகுதியில் 2ஆவது சுயேட்சை வேட்பாளராக மதுரை செல்லூரை சேர்ந்த சமூக ஆர்வலரான சங்கரபாண்டியன் என்பவர் நூதன முறையில்  தூக்கு கயிற்றில் டம்மி பணத்தை கட்டி தொங்கவிட்டவாறு வேட்புமனு தாக்கல் செய்த வந்தார்.
 
ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும், வாக்காளர்கள் பணம் பெற்று வாக்களிப்பது என்பது தூக்குமாட்டிக்கொள்வது போன்றது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையில் விழிப்புணர்வு வாசக பதாகையோடு வந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டி கையில் தூக்கு கயிறை சுமந்தபடி வந்தார். 
 
அப்போது 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே காவல்துறையினர் அவரிடம் இருந்த கயிறு மற்றும் பதாகைகளை பறிமுதல் செய்த பின்னர் முழுவதுமாக சோதனை செய்த பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் சங்கீதாவிடம் சுயேட்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
மதுரை செல்லூர் பூந்தமல்லி நகர் பகுதியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் டைல்ஸ் ஒட்டும். தொழிலில் ஈடுபட்டுவருவதோடு, நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் மக்கள் பொதுநல அறக்கட்டளையின் நிறுவனத்தலைவராக இருந்துவருகிறார்.
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து  சுயேட்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் பேசியபோது : 
 
ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் தூக்கு கயிறுடன் வேட்புமனு தாக்கல் செய்தேன். 
 
தேர்தல் என்பது அதிகாரம் உள்ளவர்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
 
ஏற்கனவே சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: டெல்லி சென்றார் செல்வப்பெருந்தகை..!