Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த ஊரான தேனியில் செல்வாக்கை நிரூபிப்பாரா ஓபிஎஸ்! மல்லுக்கட்ட தயாராகும் தினகரன்..

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (07:55 IST)
ஏற்கனவே எதிர்பார்த்தது போல தேனி நாடாளுமன்றத் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

 
இந்நிலையில் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், தேனியில் நான் ஓபிஎஸ் மகன் எதிர்த்துப் போட்டியிட்டாலும் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார்.  அமமுக  வேட்பாளர் பட்டியலில் தேனி உட்பட சில தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. நாளை அல்லது நாளை மறுதினம் தினகரன் மீதமுள்ள தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தேனி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது தெரிந்துவிடும். ஒருவேளை தேனியில் தினகரன் போட்டியிட்டால் அல்லது இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் போட்டியிட்டால் ஓபிஎஸ் மகன் ரவீந்தருக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
தேனியில் தனது மகன் ரவீந்திர நாத்தை  வெற்றி பெற வைத்து,  சொந்த ஊரில் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் தற்போது இருக்கிறார். அதேநேரம் டிடிவி தினகரன், ஓபிஎஸ் மகனை மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். எனவே தேனியில் அமமுக மற்றும் அதிமுக இடையேதான் நேரடியாக கடும்போட்டி இருக்கும் என தெரிகிறது. 
 
சொந்த ஊரான தேனியில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபிப்பாரா அல்லது தினகரன் ஓ பி எஸ் ஐ விட தனக்கு தான் அங்கு செல்வாக்கு இருக்கிறது என்று வென்று காட்டுவாரி என்பது மே 23-ஆம் தேதி தெரிந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments