Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபிஎஸ் மகனுக்கு எதிராக போட்டி ? – தினகரன் சூசக பதில் !

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (15:27 IST)
தேனி தொகுதியில் களமிறங்க இருக்கும் ஓபிஎஸ் மகனுக்கு எதிராக டிடிவி தினகரன் நிற்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளு மன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக அதிமுக ஆகிய அணிகளில் இணைந்துள்ளன. திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றனர். அதிமுக இன்று தாங்கள் போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஓபிஎஸ் மகனுக்கு எதிராக தேனித் தொகுதியில் நிற்கும் திட்டம் உள்ளதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் தன்னை தேனி தொகுதியில் நிறக் சொல்லி இருப்பதாகவும் அறிவுறுத்துவதாகக்  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments