Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ் – ’குடிமகன்கள்’ அவதி !

இன்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ் – ’குடிமகன்கள்’ அவதி !
, செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (15:09 IST)
தேர்தலை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் 5000 டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரண நாட்களில் டாஸ்மாக் மூலம் சராசரியாக 70 கோடி ரூபாய் அளவுக்கும் பண்டிகை நாட்களில் அதை விட 30 முதல் 50 சதவீதம் அதிகமாகவும் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைத்து வருகிறது. தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கும் முக்கியமான துறையாக டாஸ்மாக் இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதில் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முந்தைய 48 மணிநேரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் ஆகிய நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து தமிழகத்தில் இன்று முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தேர்தலின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸ்காரன் மனைவியுடன் ஜல்சா: தகாத உறவால் வந்த விபரீத வினை