Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் சிக்கிய பணம் – கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்த பாஜக

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (16:02 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரின் காரில் 2 கோடி ரூபாய் அளவில் பணம் பிடிபட்டுள்ளதை அடுத்து தமிழக பாஜகவினர் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பெரம்பலூர் பகுதியில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக கார் ஒன்றில் பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலிஸார் காரை மடக்கி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது உரிய ஆவணங்கள் மற்றும் கணக்கு இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூர் நோக்கி செல்லும் குறிப்பிட்ட காரில் சட்ட விரோதமாக பணம் கொண்டு செல்வதாக வந்த தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அந்த காரை மடக்கி பேரளி சுங்கச்சாவடி அருகே சோதனை நடத்தினர். அப்போது, காரின் நான்கு கதவுகளின் உள்ளே மறைத்து வைத்திருந்த ரூ.2.10 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தங்கதுரை, பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் என தெரியவந்தது. இதனால் இந்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து சென்றார்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தங்கதுரை, பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் என தெரியவந்தது. இதனால் இந்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து சென்றார்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தமிழக பாஜக இந்த நிகழ்வை முன்னிட்டுக் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டு திருமாவளவனையும் ஸ்டாலினையும் கிண்டல் செய்துள்ளது. அந்த கார்ட்டூனில் ஸ்டாலினும் திருமாவளவனும் கையில் கார் கதவுடன் இருப்பது போலவும், அக்கதவு லாக்கர் போல் வடிவமைக்கப்பட்டு இருப்பது போலவும் அக்கார்ட்டூன் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments