Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிக்கடி அடிக்கல் நடுவதால்... சவ்கிதார் போன்று மோடிக்கு புதுப்பெயர் தந்த ஸ்டாலின்!!

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (15:49 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று முதல் துவங்கியுள்ளார். தனது முதல் பிரச்சாரத்தை திருவாரூரில் இருந்து துவங்கினார். 

 
திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் அமோக ஆதரவை தந்தனர். அவர் செல்லுமிடம் எல்லாம் உதயசூரியன், உதயசூரியன் என்ற கோஷத்தை முழங்கினர். 
 
திருவாரூர் மக்கள் என்றுமே மறக்க முடியாத தலைவர் மு.கருணாநிதி என்பதால் மண்ணின் மைந்தரான மு.க.ஸ்டாலினுக்கும் திருவாரூர் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்ததில் வியப்பேதும் இல்லை.
இப்படியிக்க பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் பாஜகவுக்கு எதிராக பேசியது பின்வருமாறு, ஊழல் செய்பவர்களுடன் பிரதமர் மோடி கூட்டணி வைத்துள்ளது வெட்கக்கேடானது. குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்கும் நிலையிலும் அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்துள்ளது. 
 
நரேந்திர மோடியை இரும்பு மனிதர் என அழைக்கிறார்கள். ஆனால் அவர் இரும்பு மனிதர் அல்ல, அடிக்கல் அடிக்கடி நடுவதால் அவர் கல் மோடி என்று விமர்சித்தார். 
 
மேலும், கருணாநிதி பிறந்ததால் திருவாரூர் திமுகவின் தலைநகரம் என்று கூறிய மு.க.ஸ்டாலின், ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளுடன் மத்திய பாஜக ஆட்சியும், தமிழக அதிமுக ஆட்சியும் முடிவுக்கு வரும் என் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments