Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் கேட்கும் 3 கேள்விகள் – பதிலளிக்காமல் நழுவும் ஈபிஎஸ் !

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (10:54 IST)
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின் தொடர்ந்து எல்லா ஊர்களிலும் எடப்பாடி பழனிசாமியிடம் 3 கேள்விகளை கேட்டு வருகிறார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தெருக்களும் பிரச்சாரங்களால் நிரம்பி வழிகின்றன. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையிலும் பிரச்சாரம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையிலும் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. பிரச்சாரங்களின் மையமாக திமுக தலைவர் ஸ்டாலினும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் பிரச்சாரங்களில் எல்லாம் அதிமுக அரசையும் தமிழக முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார். நேற்று திமுக வேட்பாளரை ஆதரித்து அரூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின் ‘நான் எங்கு பிரச்சாரத்துக்கு சென்றாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைப் பார்த்து 3 கேள்விகள் கேட்டு வருகிறேன். ஆனால் நான் கேட்கும் ஒரேயொருக் கேள்விக்குக் கூட அவர் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

என்னுடைய முதல் கேள்வி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மையை ஏன் வெளிக்கொண்டு வரவில்லை. இரண்டாவது கேள்வி, கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் ?. மூன்றாவது கேள்வி. பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நடந்துள்ளதாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்களுக்கு பின்னணியில் இருப்பது யார்? உங்கள் கட்சியின் துணை சபாநாயகர் ஜெயராமனின் மகன்களுக்கு இதில் சம்மந்தம் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஏழு அண்டுகளாக இந்த கொடுமைகள் பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறதே ?. பொள்ளாச்சியில் காவல்துறையே இல்லையா ?. எனத் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறேன், ஆனால் முதல்வர் பதில் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.’ என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்