Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் டிராவிட்டுக்கு ஓட்டு இல்லை – வீடுமாற்றத்தால் வந்த குழப்பம்

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (09:57 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படாததால் அவரால் ஓட்டுப் போட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கர்நாடகா  மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. ராகுல் டிராவிட் வசிக்கும் மத்திய பெங்களூர் தொகுதியில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவரால் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ராகுல் டிராவிட் தான் வசித்த இந்திரா நகர் பகுதியில் இருந்து அஷ்வத் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார். இதனால் இந்திரா நகர் பகுதியில் இருந்து தங்கள் பெயரை நீக்குமாறு தனது சகோதரர் மூலம் விண்ணப்பித்திருக்கிறார். அதன் படி டிராவிட்டின் பெயர் இந்திரா நகர் பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் பிறகு அவர் அஷ்வத் நகர் பகுதியில் தனது பெயரை இணைப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகே ராகுல் டிராவிட்டின் பெயர் விடுபட்டு இருப்பதை தேர்தல் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இதனால் இந்த தேர்தலில் ராகுல் டிராவிட் வாக்கு செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தேர்தல் ஆணைய தூதுவராக ராகுல் டிராவிட் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments