Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி எனப் பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்களா ? – ராகுல் பேச்சால் சர்ச்சை !

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (13:57 IST)
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி எனப் பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஏன் திருடர்களாக இருக்கிறார்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘ ‘மோடி எனப் பெயர்  வைத்தவர்கள் எல்லாம் ஏன் திருடர்களாக இருக்கிறார்கள், லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி… இன்னும் எத்தனை மோடிகள் வரப்போகிறார்களோ’ எனக் கேட்டார்.

இது குறித்து பதிலளித்துள்ள நரேந்திர மோடி ‘ காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் நான் சார்ந்திருக்கும் சமூகத்தை திருடர்கள் எனக் கூறி தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்கள். என்னைக் குற்றம் சாட்டுவது போல பிற்படுத்தப்பட்ட சமூகத்தையே இழிவுபடுத்துகிறார்கள். வாரிசு அரசியல்வாதியான ராகுல் முதலில் என்னைத் திருடர் என்றார். பின்பு என் சமூகத்தையே திருடர் என்கிறார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து நான் வந்ததால் நான் இவ்வாறு புண்படுத்தப்படுகிறேன். ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தும் உங்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments