Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூட்டை மூட்டையாக வேலூர் சிமெண்ட் குடோனில் சிக்கிய பணம்: முக்கிய புள்ளிக்கு தொடர்பா?

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (10:59 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகுப்பம் என்ற பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் சட்ட விரோதமாக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சிமெண்ட் குடோனில் சோதனை நடத்தியதில் அங்கு மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது. சுமார் ரூ.9 கோடியில் இருந்து ரூ.15 கோடி வரை சிக்கிய பணத்தின் தொகை இருக்க கூடும் என தகவல் கிடைத்துள்ளது. 
 
மேலும், ஒவ்வொரு மூட்டையிலும் வார்ட் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால், தேர்தல் நேரத்தில் அவை அரசியல் கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வைத்திருக்க கூடும் என தெரிகிறது. மேலும் இந்த பண விவகாரத்தின் பின்னணியில் முக்கிய அரசியல் புள்ளிக்கு தொடர்பிருப்பதாக தெரிகிறது.  
கடந்த மார்ச் 30 ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் அதிரடி சோதனை நடைபெற்றது, அதே போல் அவர் நடத்தி வரும் கல்லூரியிளும் சோதனை நடைபெற்றது. அப்போது ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments