Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (10:23 IST)
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, 28 செயற்கைக்கோள்களூடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45 எமிசாட்.

 
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் இன்று காலை 9.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 
 
சுமார் 436 கிலோ எடை உள்ள இந்த ராக்கெட், இந்திய ராணுவத்தின் உளவுப்பணி பயன்பாட்டிற்காக செலுத்தப்பட்டுள்ளது. மினி செயற்கைக்கோள் எமிசாட்டும் இதனுடன் சேர்த்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.  
இந்த ராக்கெட்டில் அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் ‌இருந்து தலா ஒரு செயற்கைக்கோள் மற்றும் லுதுவேனியாவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என 4 நாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. 
 
இஸ்ரோ மூலம் முதல்முறையாக ஒரே ராக்கெட்டில் 3 செயற்கைக்கோள்கள் வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் நிலை நிறுத்த உள்ளது. அதாவது, தரையில் இருந்து 749 கிமீ தொலைவில் எமிசாட்டும், 505 கிமீ தூரத்தில் 28 அயல்நாட்டு செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments