Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் கட்ட வாக்குப்பதிவு – ஒரு பார்வை !

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (10:26 IST)
நேற்று மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

மக்களவைத் தேர்தலின் 7 கட்டமான வாக்குப்பதிவில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்துமுடிந்துள்ளது. இந்த வாக்குப்பதிவில் ஆந்திரப் பிரதேசம் - 25, அருணாசலப் பிரதேசம் - 2, பிகார் - 4, சத்தீஸ்கர் - 1, ஜம்மு காஷ்மீர் - 2, மகாராஷ்டிரம் - 7, மணிப்பூர் - 1, மேகாலயா - 2, மிசோரம் - 1, நாகாலாந்து - 1, அசாம் - 5, ஒடிசா - 4, சிக்கிம் - 1, தெலங்கானா - 17, திரிபுரா - 1, உத்தரப் பிரதேசம் - 8, உத்தராகண்ட் - 5, மேற்கு வங்காளம் - 2, அந்தமான் நிக்கோபார் - 1, லட்சத்தீவு - 1 என மொத்தம் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

நேற்றைய வாக்குப்பதிவின் சில முக்கிய அம்சங்கள்

பிகார் - 50%, அருணாசலப் பிரதேசம் - 66%, லட்சத் தீவுகள் - 66%, மகாராஷ்டிரம் - 56%, சத்தீஸ்கர் - 56%,உத்தரப் பிரதேசம் - 63.69%, ஒடிசா - 68%, அந்தமான் நிகோபார் - 70.67%, தெலங்கானா - 60%, ஜம்மு மற்றும் காஷ்மீர் - 54.49%, உத்தராகண்ட் - 57.85%, ஆந்திரப் பிரதேசம் - 66%,சிக்கிம் - 69%, மிசோரம் - 60%,நாகாலாந்து - 78%, மணிப்பூர் - 78.2%, மேகாலயா - 67.16%,திரிபுரா - 81.8%, அசாம் - 68%, மேற்கு வங்கம் - 81% ஆகிய அளவிலான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

ஆந்திராவின் சில தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் குறைகள் இருந்ததாகவும் அதனால் வாக்குப்பதிவு தொடங்க காலை 9 மணி வரை தாமதம் ஆனதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சில தொகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் நக்ஸல் தாக்குதல் காரணமாக ஒரு வாக்குக் கூட பதிவாகவில்லை.

ஆந்திராவில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த தாக்குதலில் ஒருவர் உயிர் இழந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்ஷிரோலி பகுதியில் வாக்குச்சாவடி அருகில் ஐஇடி குண்டு வெடித்தது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments