Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிப்பறைகளின் காவலன் நான்: கொக்கரிக்கும் சவுகிதார் மோடி

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (11:49 IST)
சவுகிதார் அதாவது காவலன் என்னும் பெயரை மோடி உட்பட அனைத்து பாஜக தலைவர்களும் தங்களுக்கு பெயருக்கு முன்னர் சேர்த்துக்கொண்டுள்ளனர். ஆனால், இது பல கேலி கிண்டலுக்கு உள்ளானது. 
 
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் சவிகிதார் மோடி. அவர் கூறியதாவது, நான் இந்த தேசத்தின் கோடிக்கணக்கான பெண்களுக்கான கவுரவத்தின் பாதுகாவலனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். 
 
வீட்டில் முறையான கழிப்பிட வசதி இல்லாமல் பெண்கள்  அவமானத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே, பெண்களுக்கு வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டிக்கொடுத்து, அவர்களின் சுயமரியாதையையும், கவுரவத்தையும் நாங்கள் காப்பாற்றியுள்ளோம். 
பெண்களின் கவுரவத்தை காக்க கழிப்பிடங்களை உருவாக்கியதன் மூலம், கழிப்பறைகளின் காவலன் என்பதில் பெருமை அடைகிறேன். சவுகிதார் என்று என்னை காங்கிரஸ் கட்சி இழிவுபடுத்துவது, நீண்ட காலமாக கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பணியில் இருக்கும் துப்புரவு தொழிலாளர்களை இழிவுபடுத்துவதற்கு சமம். 
 
காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் இது நகைச்சுவையான விஷயமாக இருக்கலாம். ஆனால், எனக்கும் எங்களுக்கும் இது தீவிர அக்கறையுள்ள ஒரு விஷயமாகதான் நினைக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்று கொள்வேன்: முதல்வர் பதவி குறித்து ஷிண்டே..!

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

சென்னை அருகே அம்மா உணவகத்தில் சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு... பெண் காயம்

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments