மிரட்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்... "லக்ஷ்மி பாம்" படத்தின் மோஷன் போஸ்டர்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (16:49 IST)
தமிழ் திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.

அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ் வெறித்தனமாக நடித்து ஹிட் கொடுத்தார்.

திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான காஞ்சனா பெரும் வரவேற்பை பெற்று சாதனையை படைத்து  ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி , காஞ்சனா, காஞ்சனா 1 , காஞ்சனா  2,   காஞ்சனா 3 என அத்தனை படமும் வசூலில் சாதனை செய்தது. இப்படி தமிழ்,  தெலுங்கை தொடர்ந்து தற்போது காஞ்சனா திரைப்படத்தை இந்தியில் அக்சய் குமாரை வைத்து லாரன்ஸ் இயக்கியுள்ளார்.

அக்ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ள இப்படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். கொரோனா திரையரங்கு மூடலால் இப்படம் நேரடியாக OTT தளத்தில் வரும் நவம்பர் 9-ம் தேதி தீபாவளி தினத்தின் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரை  நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மிரட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

அடுத்த கட்டுரையில்
Show comments