Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கண்ணன் பிறந்த நாள்

Webdunia
சனி, 16 ஆகஸ்ட் 2014 (21:37 IST)
மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
 

 
கிருஷ்ணர் இந்திய மனங்களில் பல்வேறு விதங்களில் குடிகொண்டிருப்பவர். மீராவுக்கோ காதலர், ராதாவுக்கும் அவ்வாறே. அர்ஜுனனுக்கோ நண்பர், தத்துவ ஞானி, வழிகாட்டி.
 
நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர். பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்த போது அவருக்கும் ஒரு தரிசனம் கொடுக்கிறார். ஆனால் முழு ஆயுதபாணியாகக் காட்சி தருகிறார். ஏனெனில் பீஷ்மர் ஒரு போர் வீரர். அவருக்குப் போர் வீரராகவே காட்சியளிக்கிறார்.
 
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் வனமாலி கதீ சாங்கி சங்கீ சக்ரீச்ச நந்தகீ என்ற ஸ்லோகம் பீஷ்மருக்கு கிருஷ்ணர் கொடுத்த போர்வீரர் தரிசனத்தைக் குறிப்பதாகும்.
 
இந்துக் கடவுளர்களில் பக்தர்கள் மனத்தில் தனது தீராத விளையாட்டுத் தனத்தினால் அதிகம் குடிகொண்டிருப்பவர் கிருஷ்ண பகவான்தான்.
 
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி. ராமர் பிறந்த தினம் நவமி.
 
கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல், பகவத் கீதையாகும். 
 
இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களைச் செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரைத் தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி தொடர்பான மேலும் சில பக்கங்கள் இங்கே:
 

முகுந்தா.. முகுந்தா..!

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. 

மேலும் வாசிக்க இங்கே சொடுக்குங்கள்
 

 

கண்ணனின் கதை 

கிருஷ்ணர்  பிறந்த அந்த சிறியச் சிறைச்சாலையின் மீது கத்ரகேஷப் தேவ் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் பழைய சிறைச்சாலை அப்படியே உள்ளது. கண்ணன் பிறந்த இடமாக அது வழிபடப்படுகிறது.

மேலும் வாசிக்க இங்கே சொடுக்குங்கள்

 

 
 
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் - பொட்டுக்கடலை முறுக்கு

கிருஷ்ண ஜெயந்தி அன்று, பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்குப் பிரத்யேகமான இந்தச் சுவையான பொட்டுக்கடலை முறுக்கைச் செய்து சுவைத்து மகிழுங்கள். 

மேலும் வாசிக்க இங்கே சொடுக்குங்கள்
 

இனிப்பு சீடை

தேவையானவை
 
அரிசி மாவு - ஒரு கப்
வெல்லம் - 100 கிராம்
எண்ணெய் - ஒரு கப்
ஏலக்காய் பொடி - சிறிது
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி

மேலும் வாசிக்க இங்கே சொடுக்குங்கள்

 

அவல் லட்டு செய்வது எப்படி?

அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுகளைச் செய்து கொள்ளுங்கள்.
 
உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டுகள் தயார்.

மேலும் வாசிக்க இங்கே சொடுக்குங்கள்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments