கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. அந்த அவல் லட்டைச் செய்வது எப்படி என்று பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
அவல் - 1 கப்
பொட்டுக் கடலை (உடைத்தக் கடலை) - 1/2 கப்
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலப்பொடி
பால் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
நெய்
தேங்காய் துருவல் - 2 கப்
செய்முறை
அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித் தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுகளைச் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டுகள் தயார்.