Publish Date: Sat, 04 Mar 2017 (05:33 IST)
Updated Date: Sat, 04 Mar 2017 (08:52 IST)
பிரபல பாடகி ஒருவர் சமீபத்தில் பிரபலமானவர்களின் அந்தரங்க புகைப்படங்களை டுவிட்டரில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் அவரது டுவீட்டில் இருந்தது. அவருடைய டுவிட்டால் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து இன்னொரு பிரபல பாடகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தான் திறமையினால் முன்னேறியதாகவும், தான் எந்தவொரு அட்ஜெஸ்ட்மெண்டிலும் கமிட் ஆகவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு அந்த முந்தைய பாடகி பதிலளிக்கையில் 2016ஆம் ஆண்டில் உன்னுடைய கடைசி 4 அபார்ஷன்கள் எங்கு, எப்படி நடந்தது என்பது எனக்கு தெரியும். டாக்டர் ரிப்போர்ட் வேண்டுமா? என்று கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். இரண்டு பேரின் டுவிட்டுக்களால் பல உண்மைகள் வெளிவரும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.