சரத்குமார் டிஸ்சார்ஜ்: டாக்டர்களுக்கு நன்றி கூறிய ராதிகா!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (14:03 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் படப்பிடிப்பு ஒன்றுக்கு சென்று இருந்த சரத்குமாருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதனை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் காரணமாக தற்போது சரத்குமார் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதேபோல் தனது தந்தைக்கு குணமாகிவிட்டதாக வரலட்சுமியும் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து ராதிகா தனது டுவிட்டரில், ‘சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பை குணமாக்கிய டாக்டர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறிய ராதிகா அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்., அதே போல் வரலட்சுமியும் தனது தந்தையை குணப்படுத்திய மருத்துவர்களுக்கு டுவிட்டரில் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்று ரீரிலீஸ்.. அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்..!

அமைச்சர் கே.என்.நேரு மீது இன்னும் வழக்கு பதியவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

மகள் நிச்சயதார்த்தம் ஜாலியா போனாலும் சரண்யாவுக்கு இப்படியொரு வருத்தமா? போட்டுடைத்த கணவர்

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்த நடிகை திடீர் தற்கொலை.. குடும்ப பிரச்சனையா?

‘முதல்வன்’ சூட்டிங் மட்டும்தான் ரகுவரன் கரெக்ட் டைமுக்கு போனாரு.. காரணத்தை சொன்ன ரோகிணி

அடுத்த கட்டுரையில்
Show comments