Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சம்மு நடிகையின் மார்க்கெட் அவ்வளவுதானா?

Advertiesment
தமிழ் சினிமா
, செவ்வாய், 19 ஜூன் 2018 (16:33 IST)
கல்யாணத்தால் சம்மு நடிகையின் மார்க்கெட் காலியாகிவிட்டதாகக் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 
சென்னையைச் சேர்ந்த சம்மு நடிகை, தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். அவர் கல்யாணத்துக்கு ஓகே சொன்ன நேரம், நிறைய படங்கள் மளமளவென புக்காகின. ‘கல்யாணத்துக்குப் பிறகும் நடிப்பேன்’ என்று சொல்லி பட வாய்ப்புகளைக் கைப்பற்றினார் நடிகை.
 
அப்படி அவர் கைப்பற்றிய படங்களில் சில ரிலீஸாகிவிட்டன; சில படங்களின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தற்போது ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் சம்மு. அது, ஹிந்தியில் வெற்றிபெற்ற படத்தின் ரீமேக். இதைத் தவிர கல்யாணத்துக்குப் பிறகு அவர் எந்தப் படத்திலுமே கமிட்டாகவில்லை.
 
புதுப் படங்களில் நடிக்கவில்லையா என்று அவரிடம் கேட்டால், ‘நல்ல கதைகளாகக் கேட்டு வருகிறேன். கல்யாணத்துக்குப் பிறகு பொறுப்பு அதிகரித்துவிட்டது. வருகிற எல்லாப் படங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று நொண்டிச் சாக்கு சொல்லி வருகிறாராம் சம்மு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாஷிகாவை பாத்ரூம் கழுவவிட்ட ஜனனி ஐயர்