திமிரு நடிகரை கழட்டி விட்டு வம்பு நடிகருடன் ஒட்டிக்கொண்ட வாரிசு நடிகை!
திமிரு நடிகரை கழட்டி விட்டு வம்பு நடிகருடன் ஒட்டிக்கொண்ட வாரிசு நடிகை!
Publish Date: Fri, 25 Nov 2016 (12:02 IST)
Updated Date: Fri, 25 Nov 2016 (13:41 IST)
திமிரு நடிகரும் அந்த வாரிசு நடிகையும் காதலித்து வந்ததும், திருமணம் செய்யப்போவதாக அறிவித்ததும் அனைவரும் அறிந்த ஒன்றே. வாரிசு நடிகையின் அப்பாவை திமிரு நடிகர் சீண்ட இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
இருவரும் பிரிந்துவிட்டதாகவே கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் திமிரு நடிகரின் எதிரி நடிகரான வம்பு நடிகருடன் அந்த வாரிசு நடிகை ஒட்டிக்கொண்டு சமீபத்தில் போட்டோ எல்லாம் வெளியிட்டார்.
தற்போது வம்புவும், வாரிசு நடிகையும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்கிறார்களாம். ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது சந்திக்கிறார்களாம். இவர்களுக்கு ஆதரவாக சில முன்னணி நடிகைகள் கூட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த புதிய கூட்டணி நிஜ வாழ்க்கையிலும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்த செய்தி தான் கோடம்பாக்கத்தில் தீயாக பரவுகிறதாம். இதனால் திமிரு நடிகர் மிகுந்த மன உளைச்சலிலும் கோபத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.
Caston
Publish Date: Fri, 25 Nov 2016 (12:02 IST)
Updated Date: Fri, 25 Nov 2016 (13:41 IST)