கவிப்பேரரசு சொன்ன ஒரு வார்த்தையால், உலக நாயகனை அவமரியாதை செய்துவிட்டதாக கொதித்துப் போயுள்ளனர் அவருடைய ரசிகர்கள்.
‘நெல்லை அள்ளலாம்… சொல்லை அள்ள முடியாது’ என்பார்கள். வார்த்தைகளால் வடம்பிடிக்கும் கவிப்பேரரசுக்கே, வார்த்தைகளால் இப்படியொரு நிலமை வந்திருக்கும் என கனவிலும் நினைத்து கூடப் பார்த்திருக்க முடியாது. யானைக்கு அடி சறுக்கியது போல ஆகிவிட்டது அவர் நிலமை.தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் சிகரத்துக்கு, அவருடைய சொந்த ஊரில் சிலை திறக்கிறார் கவிப்பேரரசு. இந்தச் சிலையை, உலக நாயகன் திறந்து வைக்கிறார். உலக நாயகனைவிட, உச்ச நட்சத்திரத்துக்கும், இயக்குநர் சிகரத்திற்கும்தான் பந்தம் அதிகம். காரணம், உச்ச நட்சத்திரத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே அவர்தான்.
அப்படியிருக்கும்போது, ‘உச்ச நட்சத்திரம் வந்து சிலையைத் திறந்துவைக்க மாட்டாரா?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ‘அவர் வந்தால் நிறைய கூட்டம் கூடிவிடும். அந்தக் கூட்டத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. யாரும் இல்லாதபோது அவர் வந்து மரியாதை செலுத்துவார்’ என்று கவிப்பேரரசு பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இது உலக நாயகன் ரசிகர்கள் காதில் விழ, ‘அப்போ என் தலைவன் வந்தா கூட்டம் வராதா..?’ என்று கேள்வி கேட்டதோடு, அந்த ஊரே ஸ்தம்பிக்கும் வகையில் கூட்டத்தைக் கூட்டப் போகிறார்களாம்.