Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட் வெளியே… சாஹா உள்ளே – இந்திய அணி எடுத்த சில அதிரடி முடிவுகள் !

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (15:25 IST)
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பராக செயல்படுவார் என இந்திய அணி கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி உடன் விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்துவிட்டன. அடுத்ததாக டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய கோலி ‘ இந்த தொடரில் விக்கெட் கீப்பிங் பணியை சாஹா மேற்கொள்வார். சாஹா உலகத் தரம் வாய்ந்த விக்கெட் கீப்பர். எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சிறப்பாக தனது திறமையை நிரூபித்தும் வருகிறார். ஆனால் காயம் காரணமாக அவரால் ஓராண்டுக்கு விளையாட முடியாமல் போனது. இப்போது மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளார்.
ரிஷப் பந்துக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவரும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவரை விட சாஹா சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கிறார்.

இந்த தொடரில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் விளையாடுவார்கள். இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் பிரதானமாக பந்துவீச்சாளராக இருந்து முதலில் பந்து வீசுவார்.  உள்நாட்டில் அஸ்வினின் பந்துவீச்சு எதிரணியினருக்கு நிச்சயம் அச்சுறுத்தலாகவே இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்… மீண்டும் தொடங்கிய சர்ச்சை!

அப்பா என் கூடவே இருக்கிறார்… அவருக்குதான் அந்த பறக்கும் முத்தம் – ஷமி நெகிழ்ச்சி!

ரஞ்சித் டிராபி.. அரையிறுதி போட்டியில் மும்பை அதிர்ச்சி தோல்வி.. விதர்பா அணி அபாரம்..!

கிரிக்கெட்ல இதெல்லாம் சாதாரணமப்பா… அக்ஸர் படேல் பெருந்தன்மை!

மீண்டும் சி எஸ் கே அணியில் ‘சின்ன தல’ ரெய்னா!

அடுத்த கட்டுரையில்
Show comments