Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விண்டோஸ் 7 இனிமே கிடையாது.. மைக்ரோசாஃப்ட் கறார்

விண்டோஸ் 7 இனிமே கிடையாது.. மைக்ரோசாஃப்ட் கறார்

Arun Prasath

, சனி, 4 ஜனவரி 2020 (17:26 IST)
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 7 என்ற கணிணி ஆப்பரேட்டிங் சிஸ்டம், வருகிற ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு இயங்காது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் கணிணி மற்றும் லேப்டாப்பிற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வழங்கி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு தனது விண்டோஸ் வரிசையில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் அது பயனர்களால் அவ்வளவாக வரவேற்கப்படவில்லை. மேலும் பயனர்கள் பெரும் அளவில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயனர்களுக்கு முழு வீச்சாக கொண்டு போய் சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் படி வருகிற ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிறுத்தப்படுகிறது. அதன் பிறகு விண்டோஸ் 7 இயங்காது எனவும் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளராத நாம் தமிழர்: 2021-க்கு கட்டம் கட்டிய சீமான்!!