Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Whats App - இல் New Update செய்தால் ’பேட்டரி’ கோளாறு பண்ணுதா ? இதுதான் விஷயம் !

Whats App - இல்  New Update செய்தால்  ’பேட்டரி’ கோளாறு பண்ணுதா ? இதுதான் விஷயம் !
, செவ்வாய், 12 நவம்பர் 2019 (20:52 IST)
நவீன உலகில் , செல்போன் பயன்படுத்துபவர்களில் வாட்ஸ் ஆப் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவு அனைவரும் வாட்ஸ் ஆப் முக்கியமான ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டது. அதில் விரல் பதிவுரேகை வைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.
 
ஆனால்,இந்த வசதியைப் பயன்படுத்தினால்  செல்போனில் சார்ஜ் குறைவதாக பலரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
 
குறிப்பாக antroid மற்றும் iphone ஆகிய இரண்டிலும் பெட்டரி குறைவாக சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது, நாட்டில்முன்னணி செல்போன் நிறுவனமான one plus மாடல் செல்போனிலும் sansung நிறுவன மாடல் செல்போன்களிலும் இந்த பிரச்சனை எழுந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.மேலும் வாட்ஸ்ப் புது அப்டேட் செய்ததும் பேட்டரி குறைவதற்கு, (2.19.3080) தான் காரணம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
வாடிக்கையாளர்களின் அதிருப்தியால் அதிர்ச்சி அடைந்த வாட்ஸ் ஆப் நிறுவனம்  இந்தக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவசேனாவின் பேராசையால் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி!