Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ சேவைகளுக்காக ரூ.30,000 கோடி முதலீடு: ரிலையன்ஸ்

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (16:26 IST)
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சேவைகளுக்காக, மேலும் ரூ.30,000 கோடி  முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இதனால் 90 சதவீதம் செல்போன் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம்  ஈர்க்க வேண்டும் என்பதே இதன் குறிகோளாக கொண்டு செயல்படுகிறது.

 
இணையதளம், தொலைபேசி அழைப்புகள் அனைத்தையும் இலவசமாக வழங்கி வரும் ஜியோ. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியோடு இலவச சேவை முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. எனவே முந்தியடித்து சிம் கார்டை வாங்கினர் மக்கள். தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் பேர் ஜியோ சிம் கார்டை வாங்கிவிட்டனர். இந்நிலையில், இலவச சலுகையை 2017 மார்ச்  இறுதி வரை நீடித்தது.
 
சென்ற வாரம் நடைபெற்ற அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஜியோ சேவைகளுக்காக, மேலும் ரூ.30,000 கோடி முதலீடு செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 600 கோடி எண்ணிக்கையிலான முன்னுரிமை உள்ள பங்குகளை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்து, இந்த நிதியை திரட்டப் போவதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே, ஜியோ தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்திற்காக மட்டும் ரூ.1.71 லட்சம் கோடியை ரிலையன்ஸ்  இன்டஸ்ட்ரீஸ் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில், மேலும் ரூ.30,000 கோடியை முதலீடு செய்து, தொலைத்தொடர்புப் பணிகளில் புதிய மாற்றம் மேற்கொள்ள உள்ளதாக, நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments