Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் முன்னால் நிர்வாணமாக நில்: மாணவியிடம் வரம்பு மீறிய ஆசிரியர்!

என் முன்னால் நிர்வாணமாக நில்: மாணவியிடம் வரம்பு மீறிய ஆசிரியர்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (15:57 IST)
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ஆண் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரை பல மாதங்களாக பள்ளிக்கூடம் முடிந்த பின்னர் தன் முன்னால் நிர்வாணமாக நிற்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.


 
 
அவுரங்காபாத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் எழாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் வரம்பு மீறி நடந்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக குறிப்பிட்ட அந்த மாணவியை பள்ளிக்கூடம் முடிந்ததும் அவரின் ஆடைகளை முற்றிலுமாக கழட்டி விட்டு தன் முன்னர் நிர்வாணமாக நிற்கவும், குளிக்கவும் வற்புறுத்தி வந்துள்ளார்.
 
இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவியை மிரட்டியும் வந்துள்ளார் அந்த ஆசிரியர். இந்நிலையில் அவரின் தொந்தரவு தாங்க முடியாத மாணவி நடந்த விஷயங்களை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
 
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அந்த ஆசிரியர் குறித்து புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த ஆசிரியரின் வீட்டுக்கு சென்ற போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது அவர் தலைமறைவாகிவிட்டார்.
 
இது குறித்து கூறிய போலீசார், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தலைமறைவாக உள்ள அவரை விரைவில் பிடித்துவிடுவோம் என கூறினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்