Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ. 10,000 விலை குறைந்த நோக்கிய ’ஸ்மார்ட்போன் ’...நெம் 1 இடத்துக்கு வர முயற்சியா ?

ரூ. 10,000 விலை குறைந்த நோக்கிய ’ஸ்மார்ட்போன் ’...நெம் 1 இடத்துக்கு வர முயற்சியா ?
, திங்கள், 8 ஜூலை 2019 (15:29 IST)
நம் நாட்டில் செல்போன் பரவத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டங்களில் நோக்கியா செல்போனை வைத்திருந்தாலே மிக அவர் மிகவும் மதிப்புடையவராகக் கருதப்பட்டார். அதன் பின்னர் தொழில்நுட்பம் படுவேகத்தில் வளர்ந்து உலகில் புதிய புரட்சியே உண்டு பண்ணியது. அதன் பின்னர் சேம்சங், மோட்டோரோலா சோனி, லாவா, இனோவா, மைக்ரோமேக்ஸ், ஒன் பிள்ஸ், ரெட் மி ஆகியவற்றில் வருகையால் போட்டியை சமாளிக்க முடியாமல் சில காலம் ஒதுங்கி இருந்தது நோக்கியா.
அந்த நேரத்தில் மற்ற மொபைல் முன்னணி நிறுவனங்களில் சேம்சங் ஸ்மார்ட் போன் விற்பனையில் முதலிடத்துக்கு வந்தது. தற்போது அதை பின்னுக்கு தள்ளிவிட்டு ரெட் மீ முதலிடத்துக்கு வந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல் தடுமாறியது. இந்நிலையில் மீண்டும் முதலிடத்துக்கு வர முயற்சித்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
 
இந்நிலையில் நோக்கியா 6.1 அடிப்படை மாடலின் விலை அறிமுகம் ஆனபோது 16, 999 இருந்தது. தற்போது அது 10000 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ,. 6999 க்கு விற்கப்படுகிறது.
 
இதன் சிறப்பம்சம்சங்கள் :  4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 16 மெகாபிக்ஸல் கேமரா, 8 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா, யு எஸ் பி டைப் ‘சி’, ஆண்ட்ராய்டு பை என எல்லாமே சிறப்பான  வசதிகளாக உள்ளன.
 
தற்போது, இந்த ஆப்பர் அமேசான், ஃபிளிப்கார்டிலும் வழங்கப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்குதான் சீட்…மதிமுகவுக்கு இல்லை – வைகோ சமாதானம்!