பலரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த ஷாவ்மி நிறுவனத்தின் புதிய Redmi Pad Pro 5G தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஷாவ்மி நிறுவனம் லேப்டாப், டேப் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரெட்மி முன்னதாக வெளியிட்ட சிறப்பான செயல்பாடுகள் கொண்ட பேட் 5 மற்றும் பேட் 6 ஆகிய மாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. மிகவும் குறைந்த விலையில் வெளியாகும் இந்த ரெட்மி டேப்கள் கிராபிக் டிசைனர்களுக்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது.
தற்போது ரெட்மி நோட் 6ஐ விட 16 சதவீதம் பெரிதான டிஸ்ப்ளேவை கொண்ட Redmi Pad Pro 5G ஐ அறிமுகம் செய்துள்ளது ரெட்மி. இதில் ரெட்மி பேட் ப்ரோ சிம் கார்டு ஸ்லாட் இல்லாமல் வைஃபை மூலமாக இயங்கக்கூடியது. Redmi Pad Pro 5G மாடல் நேரடியாக 5ஜி சிம்மை பயன்படுத்தி உபயோகிக்கக்கூடியது.
Redmi Pad Pro 5G பேட் சிறப்பம்சங்கள்:
இந்த Redmi Pad Pro 5G பேட் குயிக் சில்வர், கிராஃபைட் க்ரே ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. சிம் கார்டு இல்லாத Redmi Pad Pro மாடல் (6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி) ரூ.21,999 ஆகவும், சிம் கார்டு வசதி உள்ள Redmi Pad Pro 5G மாடலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.24,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 2ம் தேதி முதல் இந்த Redmi Pad Pro 5G பேட் விற்பனைக்கு வர உள்ள நிலையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Edit by Prasanth.K