Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன் ப்ளஸ் புதிய மாடல்களுக்கு 6 ஆயிரம் ஆஃபர்! - ஆறாவது ஆண்டு அதிரடி!

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (17:23 IST)
இந்தியாவில் மொபைல் விற்பனையில் முக்கிய இடம் வகிக்கும் ஒன் ப்ளஸ் நிறுவனம் தனது புதிய மாடல் மொபைல்களுக்கு 6 ஆயிரம் வரை ஆஃபர்களை அறிவித்துள்ளது.

ஒன் ப்ளஸ் நிறுவனம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் ஒன் ப்ளஸ் 7 ப்ரோ, ஒன் ப்ளஸ் 7டி மற்றும் ஒன் ப்ளஸ் 7டி ப்ரோ ஆகிய புதிய மாடல் மொபைல்களை அறிமுகம் செய்ய உள்ளார்கள்.

இந்த மொபைல்களை எச்.டி.எப்.சி கார்டுகள் மூலம் வாங்கினால் 7 ப்ரோவுக்கு 2000 ரூபாயும், 7டி-க்கு 1500 ரூபாயும், 7டி ப்ரோவுக்கு 3000 ரூபாயும் சலுகை வழங்கப்படுகிறது. இது தவிர அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களிலும் 6 மாத வட்டியில்லா தவணை திட்டத்தில் வாங்கி கொள்ளலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஏற்கனவே ஒன் ப்ளஸ் மொபைல்களை பயன்படுத்தி வருபவர்கள் அமேசான் மற்றும் ஒன் ப்ளஸ் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலமாக எக்ஸ்சேஞ் முறையில் பழைய ஒன் ப்ளஸ் மொபைல்களை கொடுத்து புதிய 7 ப்ரோ மாடல்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

புதியதாக அறிமுகமாகும் ஒன் ப்ளஸ் 7 ப்ரோ 48,999 ரூபாய்க்கும், 7டி மாடல் 37,999 ரூபாய்க்கும், 7டி ப்ரோ மாடல் 53,999 ரூபாய்க்கும் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments