Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயர் கனெக்சன் தேவையில்ல.. வெளியானது Airtel Xstream AirFiber 5G! – என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (16:23 IST)
இந்தியாவின் முதல் Air Fiber சேவையான Airtel Xstream AirFiber 5G சேவையை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது.



இந்தியா முழுவதும் இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி என அனைத்தும் ஸ்மார்ட் சாதனங்களாக மாறி வருகின்றன. இந்நிலையில் பல வீடுகள், அலுவலகங்களும் இணைய சேவையை பெற்று வருகின்றன. இதற்காக BSNL, Airtel, Jio உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் Wired Fiber மூலம் பல பகுதிகளில் இணைய சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் வயர் கொண்டு செல்ல முடியாத இடங்களில் இணைய சேவை அளிப்பது சிக்கலான விஷயமாக இருந்து வருகிறது. இதனால் செல்போன் போன்று சிக்னல்களில் இணைய சேவையை வழங்கும் Air Fiber வசதியை அறிமுகம் செய்வதில் தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவில் முதல் ஏர் ஃபைபர் சேவையான ஏர்டெல்லின் Airtel Xstream AirFiber 5G அறிமுகமாகியுள்ளது. இந்த ஏர் ஃபைபர் சாதனத்தை வாங்கி வீட்டில் வைத்தாலே போதும் 5G தரத்திலான இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு Airtel Xstream AirFiber –ல் சுமார் 64 டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ள முடியும். Plug and Play முறையிலான இந்த Airtel Xstream AirFiber மின்சாரத்தில் இயங்கும். இதில் WiFi 6 அதிவேக தொழில்நுட்பம் உள்ளது. 100 Mbps வேகத்தில் டேட்டா டவுன்லோட் ஸ்பீட் இருக்கும். இதற்கான மாத கட்டணம் ரூ.799 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2500 டெபாசிட் கட்டணம். தற்போது இந்த சேவை டெல்லி மற்றும் மும்பையில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஏர் ஃபைபர் சேவை விரிவுப்படுத்தப்படவுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments